மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

முன்னாள் போராளி அஜந்தனுக்கு வாழ்வாதார உதவி

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு ஐந்தரை மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனின் வாழ்வாதாரத்திற்கான உதவி வழங்கப்பட்டுள்ளது.

முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் அஜந்தனுக்கு இன்று மாலை வழங்கிவைக்கப்பட்டன.

முன்னாள் போராளி அஜந்தன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு ஐந்தரை மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது தொழில் நடவடிக்கைக்கான பொருட்கள் காணாமல்போயிருந்தன.

இந்த நிலையில் அஜந்தன் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழிலை நடாத்துவதற்கான உதவிகளை அவர் கோரியிருந்தார்.

இதனடிப்படையில் முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பினால் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான வலைகள் இன்று மாலை வழங்கிவைக்கப்பட்டன.சுமார் 41ஆயிரம் ரூபா செலவில் இந்த வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் மா.சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் பொருளாளர் தயானந்தரவி,அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.சுகுணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.