மட்டக்களப்பு கள்ளியங்காடு
இருதயபுரம் கிழக்கு கிராமசேவகர் பிரிவு
சேமைக்காலைக்கு முன்னால் உள்ள கட்டிடம் (களஞ்சியசாலை)
கவனிப்பாரற்று காடு மண்டி கயவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளின் கூடாரமாக காணப்பட்டது, நாட்டின் அசாதாரணமான சூழலில் குறித்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி உடனடியாக தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், மற்றும், பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து
மாவட்ட அரச அதிபரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது.
மாவட்ட அரச அதிபரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது.
அரச அதிபர் மட்டு மாநகர சபையின் முதல்வருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தியதுடன் மூன்று நாட்களுக்குள் குறித்த இடம் துப்பரவு செய்யப்படவில்லையாயின் அதன் பின் அந்த இடத்தை மாநகர சபை பொறுப்பேற்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது, முதல்வர் பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை துரிதப்படுத்த பணித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை களஞ்சியசாலையின் உரிமையாளர்களான பிரண்டிக்ஸ் நிறுவனத்தார் குறித்த இடத்திற்கு நேரடியாக வந்து டோசர் மற்றும் ஜே சி பி இயந்திரங்கள் மூலம் காடுகளை ஒதுக்கி துப்பரவு செய்துள்ளனர்.
துப்பரவுக்கு முன் காட்சி.
மட்டக்களப்பு நகரின் மத்தியில் காடு அடர்ந்து பயங்கரமான இடமொன்று தொடர்பாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இவ்வாறு தலைப்பிட்ட செய்தி ஒன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன் எமது மட்டு செய்திகள் இணையத்தளத்தில் வெளிவந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்