எதற்கெடுத்தாலும் தமிழர்களை மட்டும் சந்தேகக் கொண்டு பார்ப்பதை அரசு நிறுத்தவேண்டும் -குமுறுகிறார் மதன்

எதற்கெடுத்தாலும் தமிழர்களை மட்டும் சந்தேகக் கொண்டு பார்ப்பதை இனியாவது இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும். வவுணதீவுக் கொலைச் சம்பவத்தில் புலனாய்வுத் துறையினரும் அவரோடு சேர்ந்த ஒட்டுக் குழுக்களும் சரியான முறையில் விசாரித்து அவர்கள் எடுக்கும் சம்பளத்திற்கு சரியாக வேலை செய்திருப்பார்களானால் இன்றைக்கு இந்த பாரிய அனர்த்தம் நடந்திருக்காது. அப்பாவிப் பொதுமக்கள், பிஞ்சிக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகவும் கோலைத்தனமானது என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.

 இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் 18வது அமர்வில் கடந்த 21ம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான உறவுகளின் ஞாபகார்த்தமாக நினைவுத் தூபி அமைப்பது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 21ம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுக்காக அஞ்சலி செலுத்தும் போது அவ்வாறான அவலம் இன்னுமொரு முறை இடம்பெறக் கூடாது என்ற எண்ணம் தான் அனைவர் மத்தியிலும் இருந்தது. தௌஹீத் ஜமாத் உட்பட அதோடு சார்ந்த முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் முற்றாகத் தடை செய்யப்படல் வேண்டும். மதம் மாற்றத்தை ஏற்படுத்துகின்றவர்கள் அதற்கு வலிகோலும் எவருக்கும் இந்த நாட்டில் எவ்வித அனுமதிகளும் வழங்கப்படக் கூடாது. அத்துடன் இந்த மதரஸாக்களையும் உரிய முறையில் கண்காணித்து அதனைக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும். எல்லா முஸ்லீம் மக்களையும் குறை கூறவில்லை. அவ்வாறு கூறவும் முடியாது. பயங்கரவாதத்தை மதத்தின் பெயரால் ஆதரிப்பவர்களையே நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி உட்பட சகலரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், வழிநடத்தல்கள் பற்றி ஆதரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் விடுதலைப் புலிகளின் கொள்கைப் போராட்டம் வேறு இந்த முஸ்லீம் பயங்கரவாதிகளின் போராட்டம் வேறு. இந்த முப்பது வருட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் எவ்வித வெளிநாட்டவர்களும் கொல்லப்படவில்லை என்ற கருத்துக்களும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

எமது தமிழ் இனம் பாதிக்கப்பட்ட போது இந்த நாட்டில் முஸ்லீம் இனவாதிகள் பேரினவாதிகளோடு சேர்ந்து வெடி கொழுத்தி பாற்சோறு கொடுத்து மகிழ்ந்தனர். ஆனால் தற்போது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட நெருடல்களை நினைந்து எம்மால் மகிழ முடியவில்லை எமது கவலையினையே வெளிப்படுத்துகின்றோம். அண்மை நாடான இந்தியாவில் முஸ்லீம்கள் தாம் பேசும் மொழியின் அடிப்படையில் தங்களைத் தமிழர்கள் என்றுதான் கூறுவார்கள். அதன் பின்னர் தான் இஸ்லாமியர்கள் என்பார்கள். ஆனால் இங்குள்ள ஒருசிலர் தாங்கள் ஒரு அராபியர்கள் போல் நடந்து கொள்வது மிகவும் வேதனைக்குரியது. பிட்டும் தேங்காய்ப்பூவும் போல இருக்க வேண்டும் என்பதை ஒரு இனம் மட்டும் செயற்படுத்தும் விடயம் அல்ல இரண்டு இனங்களும் ஒரே மனதோடு அதனைச் செயற்படுத்த வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் எமது இனத்திற்காக கொள்கை ரீதியில் போராடிய போராட்டம் தற்போது எல்லோர் மத்தியிலும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக உணர்கின்றேன். சிரியாவில் ஒருசில இடங்களை இழந்தமையால் இங்கு இந்த கோரத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஐஎஸ் அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொள்வதாக இருந்தால் அவர்களுடன் போரிட்டவர்களுடன் தாக்குதலை மேற்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்த எமது அப்பாவிப் பொதுமக்கள், பிஞ்சிக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகவும் கோலைத்தனமானது.

2009க்கு முன்னர் இவ்வாறான தாக்குதலை மேற்கொள்வதற்கு எவருக்கும் துணிவிருக்கவில்லை. எமது நிர்க்கதியான நிலைமையை அனைவரும் பயன்படுத்துகின்றார்கள். வவுணதீவுக் கொலைச் சம்பவத்தில் புலனாய்வுத் துறையினரும் அவரோடு சேர்ந்த ஒட்டுக் குழுக்களும் சரியான முறையில் விசாரித்து அவர்கள் எடுக்கும் சம்பளத்திற்கு சரியாக வேலை செய்திருப்பார்களானால் இன்றைக்கு இந்த பாரிய அனர்த்தம் நடந்திருக்காது.

அந்தப் படுகொலையுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் என்பவரின் குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. இவருக்கு புனர்வாழ்வு அமைச்சினால் இரண்டரை லெட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதனை மாதாந்தம் ஐயாயிரம் ரூபாவாக மீளச் செலுத்த வேண்டும். அவர் சிறையில் இருக்கின்றார். அவரின் குடும்பம் வறுமையில் இருக்கின்றது. அவரால் எவ்வாறு திரும்பச் செலுத்த முடியும். எனவே புனர்வாழ்வு அமைச்சு அவருக்கு அந்தப் பணத்தினை மீளப் பெறாமல் மானிய அடிப்படையில் வழங்க வேண்டும். அத்துடன் எவ்வித குற்றமும் புரியால் தண்டனை அனுபவித்த அவருக்கு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்களை மட்டும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதை இனியாவது இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். எதெற்கெடுத்தாலும் தமிழர்களை மாத்திரம் சந்தேகிப்பதை நிறுத்த வேண்டும்.

ஐஸ் அமைப்பின் முக்கிய குறிக்கோள் முஸ்லீம்கள் அல்லாதவர்களைக் கொன்றால் தாங்கள் 72 கன்னியர்களுடன் சொர்க்கம் செல்லாலம் என்கின்ற ஒரு நிலைப்பாடு அவர்கள் மத்தியில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. அவ்வாறு இருப்பின் காமவெறியில் மேற்கொள்ளப்பட்ட செயலாகவே எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலைப் பார்க்க முடிகின்றது.

வடக்கு கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியில் வடக்கு கிழக்கினைக் கோரி நிற்கின்ற போது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்ட எமது கோரிக்கையினைப் பயன்படுத்தி தங்களின் கரையோர மாவட்டம் அல்லது கிழக்கிஸ்தான் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். தற்போது இந்த முழுநாடும் உணர்ந்திருக்கும் ஐஎஸ் அமைப்பின் நிருவாகக் கட்டமைப்பில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த வடகிழக்கைக் கேட்கின்ற போது எத்தனையோ குழப்பங்களை மேற்கொள்பவர்கள் தற்போது முழு நாட்டையும் கோரி நிற்பதை இந்த அரசு உணர வேண்டும். எனவே இந்தத் தருணத்தில் எமது நியாயத்தினை உணர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கையைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

அத்துடன் எனது முதல் முன்மொழிவான காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்iதைப் பெயர் மாற்றம் செய்தல் அல்லது அதனை காத்தான்குடி எல்லைக்குள் கொண்டு செல்லுதல் தொடர்பான பிரேரணை தொடர்பில் பல்வேறு அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது அரசியல் அழுத்தினாலோ அல்லது என்ன காரணமோ தெரியவில்லை இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. அத்துடன் எமது மாநகர எல்லையை ஒரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பிற்குள் செயற்படுத்த வேண்டும். காத்தான்குடி பொலிஸ் நிலையம் காத்தான்குடி பிரதேசத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் தெரிவிக்கின்றேன்.

காத்தான்குடியில் எப்போதோ இடம்பெற்ற அனர்த்தத்தை இன்னமும் வெளிநாடுகளுக்கு காட்டி செயற்படும் விதத்தை நிறுத்த வேண்டும். அது எவ்வாறு இடம்பெற்றிருப்பினும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம் தான் ஆனால் பிச்சைக் காரன் காயத்தைக் காட்டி பிச்சை எடுப்பது போன்ற செயற்பாட்டினை மேற்கொள்வது அநானரீகமானது. அவ்வாறு நாங்கள் செய்யப் போனால் தற்போது குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்ட எந்த ஆலயத்தினையும் புனரமைக்காது அவ்வாறே ஞாபகார்த்தமாகப் பேணி வைத்திருக்க வேண்டும். எனவே இவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.