70கு குறைவான புள்ளி பெறும் வீதத்தை இழிவாக்கும் செயற்றிட்டம் பட்டிருப்பு வலயத்தில் ஆரம்பித்து வைப்பு.



ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 70இற்கு குறைவான புள்ளி பெறும் வீதத்தை இழிவாக்கும் செயற்றிட்டம் பட்டிருப்பு வலயத்தில் ஆரம்பித்து வைப்பு.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெறும் மாணவர்கள் வீதத்தினை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் அனுசரனையுடன் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பப்பிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் பா.வரதராஜனின் நெறியாள்கையில் இன்று(17) பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கு  முன்னெடுக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் - ஆரம்பக்கல்வி பா.வரதராஜன் மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் ஏனைய கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

   இச்செயற்றிட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தில் மூன்றாவது முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கடந்த வருடங்களில் இச்செயற்றிட்டம் மூலம் சிறப்பான பெறுபேற்றை பெற்றுள்ளதன் அடிப்படையில் பா.வரதராஜன் அவர்களின் அனுமதியோடும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு ஏனைய கல்வி வலயங்களான மட்டக்களப்பு வலயம், மண்முனை மேற்கு வலயம், கல்குடா வலயம் ஆகியவற்றின் கல்வி அதிகாரிகளுடன் இணைந்து இந்த செயற்றிட்டம் எதிர்வருகின்ற வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மாணவருக்கு முப்பத்தைந்து கையேடுகள் வீதம் 4500கையேடுகள் வழங்கப்படவுள்ளது.