போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு 45 கம்பெரலிய துரித வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப அடிக்கல் நாட்டும் விழா

 (எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு  97.5 மில்லியன் கம்பெரலிய துரித வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு 45 வேலைதத்pட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வு மே 04இ05 திகதிகளில்  இடம்பெற்றது.

21 கொங்கிறிட் வீதிகளுக்கு 42 மில்லியன். 03குளம் புனரமைத்தல் 09 மில்லியன், 06 பாடசாலைகளுக்கு மலசலதிருத்த வேலைகளுக்கு 05மில்லியன். 01 பாடசாலை விளையாட்டு 02மில்லியன்;. 03 பொது விளையாட்டு மைதானம் புனரமைப்புக்கு 05மில்லியன், 20ஆலயங்கள் 14.5 மில்லியன். 50 திருத்த வீடுகளுக்கு 15 மில்லியன் இவற்றுக்கான அடிக்கல் நாட்டும் அரம்ப நிகழ்வு நேற்றும் இன்றும் அமோகவரவேற்புடன் இடம்பெற்றிருந்தத குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு பட்டிருப்பு தொகுதி ஒருங்கிணைப்பு இணைத் தலைவரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களும்; பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களும் மற்றும் ஏராளமான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்