கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலய பிரமோற்சவப் பெருவிழா

மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயம் பிரமோற்சவப் பெருவிழாவானது எதிர்வரும் 10.04.2019 திகதி  புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 19.04.2109 வெள்ளிக்கிழமை தீர்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது .


10.04.2019 திகதி  புதன்கிழமை காலை செட்டிபாளையம் மாங்காடு கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடியேற்றத்துக்கான கொடிசீலை எடுத்து வரும் பவனியை தொடர்ந்து காலை 11.30 மணியளவில் கொடியேற்றம் இடம் பெறும்தொடர்ந்து பத்து தினங்கள் இடம் பெறவுள்ளது இதன் போது புஸ்பாஞ்சலி திருவிழா கர்ப்பூரஜோதித்திருவிழா  சதுர்வேதகோஷத்திருவிழா பஞ்சமுக அர்ச்சனை திருவிழா திராவிடதோத்திர விழா மாம்பழத்திருவிழா வேட்டைத்திருவிழா சப்பரத்திருவிழா ஆகிய திருவிழாக்கள் இடம் பெற்றவுள்ளது.
சித்திரா பௌணமி தினத்தன்று ஆலய புனித கங்கையாகிய பாலறு பல புஸ்கருணி தீத்த கங்கையில் தீர்த்த உற்சவம் இடம் பெறவுள்ளது. இதன் போது பிதிர்கடன் செய்ய இருக்கும் அடியார்கள் தமது பிதிர்கடன் நிறைவேற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இவ் பிரமோற்சவப் பெருவிழாவினை ஆலய பிரதம சிவாச்சாரியார் க.கு.மோஹானந்த குருக்கள் தலைமையில் இடம் பெறவுள்ளது. என்று ஆலய பரிபாலன சபைத்தலைவர் த.விமலானந்தராஜா எமக்கு மேலும்  தெரிவித்தார்