மட்டக்களப்பு மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகள் சபை அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகள் சபை அமைக்கப்பட்டு முதலாவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் மக்கள் பிரதிநிதிகளினால் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியதிகாரம் அமைக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்திசெய்யப்பட்டது.

இக்காலத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் வகையிலான நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் விலைப்பட்டியல் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்துவைத்தார்.

மட்டக்களப்பு பொதுச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் பொதுச்சந்தையில் நிலவும் பொருட்களின் விலைகளை அறிந்துகொள்ளும் வகையில் இந்த விலைப்பட்டியில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து வீதிகள் மாநகரசபை முதல்வரினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல்,பிரதி முதல்வர் என்.தனஞ்செயன்,மாநகரசபை உறுப்பினர்கள்,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதேநேரம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதலவாது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல்,பிரதி முதல்வர் என்.தனஞ்செயன்,மாநகரசபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.