குண்டுத்தாக்குதல் -ரெலோ விடுத்துள்ள அறிக்கை

மனுக்குலத்திற்காக சிலுவை சுமந்து, மனுக்குலத்துக்காக சிலுவையில் அறையப்பட்டு மரணித்து, மனுக்கலத்தை மீட்பதற்காக உயிர்த்தெழுந்த புனித்த்திருநாளில் அவர்களது புனித வணக்கத்தலங்களில் அவர்களை இலக்கு வைத்து மேற்கொண்ட அடிப்படைவாதிகளின் செயலை தமிழ்  ஈழ விடுதலை இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்  ஈழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாக்குதலாழிகள், இதன் சூத்திரதாரிகள் இனம் காணப்பட வேண்டும் ,

இதற்காக சட்டம் தனது கடமையை சரிவர செய்ய வேண்டும் அதற்கான வாய்ப்புக்கள் யாவும் பாதுகாப்புத்துறைக்கு வழங்கப்பட வேண்டும் என அரசை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வலியுறுத்துகின்றது.

யேசுபிரான் உயிர் பெற்ற புனித்;திருநாளை, கரிநாளாக ஆக்கவேண்டுமென்ற கருத்தியலில் இயங்கிய அடிப்படை வாதிகள் தமது இலக்காக தெரிவு செய்தது தமிழ் மக்கள் பெரும்பாலாக கூடும் வணக்கஸ்தலங்களையேயாகும். நன்கு திட்டமிட்ட வகையில் இலக்கு, நாள் ,நேரம் யாவும் குறிக்கப்பட்டுள்ளதானது இவர்களது நோக்கத்தை தெளிவாக காட்டுகின்றது.

300 க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்டு, அவர்களது உடலங்களில் இருந்து வழிந்த குருதி காய் முன்னர் தம் குறுகிய அரசியல் இலக்கை அடைவதற்காக கடந்த காலத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வாதத்தை ஆதரித்து நின்ற தம் அரசியல் உயிர்வாழ்வுக்காக  தற்போதும் அடிப்படை வாதத்தை நம்பி நிற்கும் எந்த அரசியல் வாதிகளதும் பாவச்சுமையை கழுவுவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் துணை நிற்காது என்பதை உறுதிபடக் கூறும் அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு துணை போகாது என்பதை திடமாக நம்புகின்றேன்.

அவ்வாறு அவர்களது கறைகளை கழுவி பாவ விமோசனம் செய்யும் அவசரம் ஏதும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கோ நாம் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ எழவில்லை என்பதே எமது அபிப்பிராயம் ஆகும்.

இதையும் மீறி அவர்களது பாவத்தைக் கழுவி அவர்களை புனிதராக்க யாராவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக செயற்பட்டால் அவர்களது வரலாற்றுத் துரோகம் எம்மக்களால் மறக்க மன்னிக்கப்பட முடியாத மாவச்சுமையாகிவிடும் என்பதே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தற்போதய நிலைப்பாடாகும்.