ஓரே குழியில் ஐக்கியமான ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பெருமளவான மக்களின் கண்ணீருடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினைசேர்ந்த நான்கு பேர் நேற்றைய குண்டுவெடிப்பில் உயிரிழந்திருந்தனர்.

அவர்களின் சடலங்கள் இன்று காலை கல்லடி வேலூரில் உள்ள உயிரிழந்தவர்களின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து இன்று மாலை மட்டக்களப்பு நாவலடியில் உள்ள பொதுமயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கல்லடி,வேலூர் 06ஆம் குறுக்கு வீதியை சேர்ந்த ராஜு ரமேஸ்(சீயோன் தேவாலய ஊழியர்)அவரது மகள் சசீகலா ஜசாந்தன்(30வயது)அவரது கணவன் நாராயணன் ஜசாந்தன்(36வயது)அவர்களது மகன் ஜசாந்தன் ஜாபேஸ்(2,1ஃ2)ஆகியோரே குண்டுத்தாக்குதலில் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர்களுக்கு பெருமளவானோர் அஞசல செலுத்தியதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரனால் உயிரிழந்த குடும்பத்தினருக்கான ஆரம்ப கொடுப்பனவும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.