மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து 32சிகிச்சை

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 32பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல்கூறினார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த 69பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 26பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளனர்.

ஐந்து பேர் வைத்தியர்களின் அனுமதியின்றி வெளியேறிச்சென்றுள்ளதுடன் இரண்டு பேர் கண்டி மற்றும் அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் 04பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.ஒருவர் மருத்துவரின் சிகிச்சைக்கு எதிராக வெளியேறிச்சென்றுள்ளதாகவும் வைத்திய பணிப்பாளர் தெரிவித்தார்.

தற்போது சிகிச்சைபெறும் 32பேரும் வைத்தியசாலையின் பல்வேறு விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் 26 சடலங்களும் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல்கூறினார்.

இதற்போது காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் மேலதிக தேவைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாகவும் அவர் உறுதியளித்தார்.