மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய துக்கதினம்

இலங்கையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தேசிய துக்கதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இன்று இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய துக்க தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

தேசியக்கொடி அரக்கம்பத்தில் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய மெலுகுவர்த்திகள் ஏந்தப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் மததத்தலைவர்களினால் ஆத்ம அஞ்சலி பிரார்;த்தனைகளும் இதன்போது நடாத்தப்பட்டன.

இந்த அஞ்சலி நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள்,மேலதிக அரசாங்க அதிபர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.