போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் தேசிய துக்கதினம்

 (எஸ்.நவா)

இலங்கையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தேசிய துக்கதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது

இன்று இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில்  தேசிய துக்க தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் ஆர்இ ராகுலநாயகி  தலைமையில் நடைபெற்றது.

தேசியக்கொடி அரக்கம்பத்தில் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டீ நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்த அஞ்சலி நிகழ்வில் பிரதேச செயலக  அதிகாரிகள்இ அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 21.04.2019 அன்று நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் மரணமடைந்த உறவுகளின் ஆத்மாசாந்தியடையும் வண்ணம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசிய துக்க தினமான இன்று காலை 8.30 முதல் 8.33 வரையிலான காலப்பகுதியில் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு அலுவலக வளாகத்தில் ஒன்று கூடிய உத்தியோகத்தர்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.