யுத்த காலத்தின் பின்னர் பாரிய துயரங்களை காணும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தினை விட மோசமான நிலையொன்றை இன்று மட்டக்களப்பு மக்களினால் உணரமுடிந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையானது இன்று மக்களின் அழுகையினால் நிரம்பி வழிந்ததை காணமுடிந்தது.

25பேரின் சடலங்கள் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் மரண ஓலங்களே காணமுடிகின்றது.

அத்துடன் காயமடைந்தவர்களை பார்வையிடுவருபவர்களினாலும் காயமடைந்தவர்களின் உறவினர்களினாலும் வைத்தியசாலை விடுதிகள் நிரம்பிவழிவதை காணமுடிகின்றது.

யுத்த காலத்திற்கு பின்னர் பாரிய துயரச்சம்பவங்களை இந்த வாரம் மட்டக்களப்பு கண்டுவருவது குறிப்பிடத்தக்கது.