மட்டக்களப்பில் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு -28க்கும் மேற்பட்டோர் பலி

மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதியில் உள்ள சியோன் தேவாலயத்திலேயே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை உதிர்த்த ஞாயிறு வழிபாடுகளில  ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் பெருமளவான சிறுவர்கள் உட்பட 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஊயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த குண்டு வெடிப்பு காரணமாக மட்டக்களப்பு நகரம் போர் கால நிலையில் காணப்படுவதுடன் படையினர்,விசேட அதிரடிப்படையினர்,பொலிஸார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.