மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. - கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம்.


(சசி துறையூர் )

மட்டக்களப்பு   நகரில் உள்ள புனித தேவாலயம் , மற்றும் நாட்டின் பல பாகங்களிலும்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை வண்மையாக கண்டிக்கின்றோம்.

என கிழக்கிலங்கை இந்துக்குருமார்கள் ஒன்றியம் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 மனித உயிர்களை காவுகொள்ளாதீர்கள், ஒற்றுமையை சீர் குலைக்காதீர்கள் , நாட்டின் சமாதானத்தை பாதிக்காதீர்கள் இலங்கையர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையுடன் இந்த நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக ,சுபீட்சமாக   வாழ வேண்டும். அதற்க்காக ஒன்று படுவோம்.

இத்தகைய வன்முறை சம்பவங்கள் , எத்தகைய நன்மையை சாதிக்க போகிறது ? மனிதநேயமுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ளவோ,  நியாயப்படுத்தவோ முடியாது என   கிழக்கிலங்கை இந்துக்குருமார்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.