குடி நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா?  வதந்திகளை நம்ப வேண்டாம்.


(சசி துறையூர் )

மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்று காலை முதல் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்படும் குடி நீரில் விஷம்கலந்துள்ளதாகவும்,  மக்கள் குழாய் நீர் விநியோகம் மூலம் பெறப்படும் நீரை அருந்த வேண்டாம் எனவும் மக்களிடையே பரவலாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. 

நகர மக்களிடம் இது தொடர்பாக பதட்டமும் அச்சமும் நிலவிவருகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை  முதல்வர் தி.சரவணபவன் அவர்களை  தொடர்பு கொண்டுகேட்ட போது இவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் குடி நீரில் விஷம் கலந்தது என்பது முற்றிலும் தவறான, பொய்யான விடயம் மக்கள் குழம்பத்தேவையில்லை சந்தேகமின்றி நீரை அருந்தலாம் என உறுதியாக தெரிவித்தார்.