உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்தோர்க்கு அஞ்சலி - மட்டக்களப்பு நகரில் ஒன்று கூடும் உணர்வாளர்கள்.

(சசி துறையூர்) 
கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை குண்டுத்தாக்குதலால்  பலிகொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்லி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை 06.30 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணியளவில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மசாந்திக்காக மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.