மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.

மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.

இலங்கையின் மிகப்பெரிய இளைஞர் வலையமைப்பைக்கொண்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட, மாவட்ட  இளைஞர்கழகங்களின் சம்மேளனத்திற்கு 2019 ம் வருடத்திற்கான புதிய நிருவாகிகள் இன்று வியாழக்கிழமை  (14.03.2019)  தெரிவு செய்யப்பட்டனர் .

மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் ஹாலித்தீன் ஹமீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  தலைவராக கிரான்குளத்தைச்சேர்ந்த ம.பிரியங்கன் மாவட்டத்தின் பதினான்கு இளைஞர் கழக பிரதேச சம்மேளனங்களின் பிரதிநிதிகளால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் செயலாளராக போரதீவுப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த  வே.மிதுஷா, பொருளாளராக ஏறாவூர் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த வ.சஜிந்தன், அமைப்பாளராக ஏறாவூர் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.எம். அசீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான ஜேசுதாசன் கலாராணி,  நிசாந்தி அருள்மொழி. ப.கிருபைராசா, தகவல் நிலைய உத்தியோகஷ்தர் . எம்.ஹனிபா , பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள், தேசிய சம்மேளன பிரதிநிதிகளான த.விமலராஷ், எஸ்.திவாகர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளினதும், பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களின் நிறைவேற்று குழு இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தமை குறுப்பிடத்தக்கது .