பாடு மீன் கிரிக்கட் சமரின் சம்பியன் கிண்ணத்தினை சுவீகரித்தது புனித சிசிலியா

பாடு மீன் வருடாந்த கிரிக்கட்  சமரின் இவ்வாண்டிற்கான சம்பியன் கிண்ணத்தினை மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரியணி  சுவீகரித்தது. 

முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட புனித சிசிலியா மகளிர் கல்லூரியணியினை எதிர்த்தாடிய  வின்சன்ட் உயர்தர மகளீர் கல்லூரி அணி 20 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் புனித சிசிலியா மகளிர் கல்லூரியணி வெற்றியீட்டியது.

புனித சிசிலியா மற்றும் வின்சன்ட் உயர்தர மகளிர் கல்லூரி அணியினருக்கும் இடையிலான பாடு மீன் சமர் போட்டி ஒன்பதாவது ஆண்டாக இந்த முறை நடிபெறுகின்றது. 

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் புனித சிசிலியா தேசிய கல்லூரி அணியை செரின் கசத்தன் வழிநடத்தினார். வின்சன்ட் உயர்தர  பாடசாலை அணியின் தலைவியாக மதுமிது மகேந்திரன் செயற்பட்டார்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித சிசிலியா கல்லூரி அணி 20 ஓவர்களில் 04 விக்கட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. வெற்றியிலக்கான 123 ஓட்டங்களை நோக்கி பதிலெடுத்தாடிய  வின்சன்ட் உயர்தர பாடசாலை அணியியால் 20 ஓவர்களின் நிறைவில்  08 விக்கட்டுக்களையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற முடிந்தது. 

போட்டியின் 26 ஓட்டங்களால் வெற்றியீட்டிய புனித சிசிலியா மகளீர் கல்லூரி அணிபாடு மீன் சமர் வெற்றிக்கிண்ணத்தை ஐந்தாவது தடவையாக சுவீகரித்தது.

இலங்கை பெண் கிறிக்கட்  அணியின் அமா காஞ்சனா, டிலானி மனோகர் ஆகியோர்  சிறிப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.