மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட 177 மற்றும் 178 ஆவது மாதிரிக் கிராமங்கள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டன

அனைவருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்ட 177 மற்றும்  178 ஆவது மாதிரிக் கிராமங்கள்  மக்களிடம் கையளிக்கப்பட்டன.
வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாசார அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவருமாகிய சஜித் பிரேமதாஷ தலைமையில் இந்த நிகழ்வுகள்  நடைபெற்றது.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று  சவுக்கடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கிராமங்கள் கற்பகதரு கிராமம் மற்றும் நெய்தல் கிராமம் என  பெயரிடப்பட்டுள்ளன.  இவை அனைவருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட 177 மற்றும் 178 ஆவது மாதிரிக்கிராமங்களாகும். 50 வீடுகளைக் கொண்ட இவ்விரு கிராமங்களில் நீர், மின்சாரம்உள்ளக வீதிகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.  
இந்த கிராமங்கள் 54 மில்லியன்   ரூபாய் செலவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவருமாகிய சஜித் பிரேமதாஷவினால் வீட்டு உரிமையாளர்களுக்கான  உரிமங்கள் கையளிக்கப்பட்டதுடன்இதன்போது இவ்விரு வீட்டு திட்டங்களினையும் திறம்பட பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொது மக்களுக்கான  வீட்டு கடன் உதவிகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் என்பன இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.