மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

பாடசாலை தினத்தை முன்னிட்டு பழைய மாணவர்களுக்கிடையே மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டி

மட்டக்களப்பு கல்லடி முகத்துவராம் விபுலாநந்த வித்தியாலயத்தின் 59 வது பாடசாலை தினத்தை முன்னிட்டு பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாகவும் எதிர்வரும் மார்ச் மாதம் 9,10 திகதிகளில்    பழைய மாணவர்களுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டி ஒன்று பழைய மாணவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 18 பழைய மாணவ  அணிகள் பங்குகொள்ள இருக்கிறது.  இச் சுற்றுப் போட்டியின் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதனை முன்னிட்டு மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு  பழைய மாணவர்களின் ஒன்று கூடல் இடம் பெறவுள்ளது. 

சனிக்கிழமை காலை 7 மணிக்கு அனைத்து பழைய மாணவர்களையும் பாடசாலைக்கு வருகை தரும்படி கேட்டு கொள்வதுடன்  ஞாயிற்றுக்கிழமை  இடம்பெறவுள்ள  பரிசளிப்பு நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து பழைய மாணவர்களையும் அழைக்கின்றனர் பழைய மாணவர் சங்கத்தினர்.