மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

பெரியகல்லாறில் சடலம் மீட்பு

(புருஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஓடையில் இருந்து சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஓடைப்பகுதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்க்கப்பட்ட சடலம் பெரியகல்லாறு 03ஆம் குறிச்சி,சின்னத்துரை வீதியை  சேர்ந்த க.பொன்னுத்துரை (75வயது)என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மரண விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.