மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

தியாக தீபம் அன்னை பூபதியின் சமாதியில் சிரமதானம்

தியாக தீபம் அன்னை பூபதி 31வது ஆண்டு நினைவுவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு மட்டக்களப்பு,நாவலடியில் உள்ள அன்னையின் சமாதியில் சிரமதான பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி அன்னை பூபதியின் 31வதுஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இந்த சிரமதான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சிரமதான நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் தீபாகரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட வாலிப முன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அன்னையின் சமாதி தூய்மைப்படுத்தப்பட்டதுடன் தொடர்ந்தும் பூபதி அன்னையின் நினைவேந்தல் நிகழ்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.