மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் திரிபீடக நூலினை தேசிய மரபுரிமையாக பிரகடன நிகழ்வு

போதி மாதவன் அருளிய திரிபீடக நூலினை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்திய தேசிய விழாவுக்கு இணைவாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகி;னறன.

பௌத்த போதனையின் ஒழுக்கம், அபிதர்மம், சூத்திரம் ஆகியன அடங்கிய பாளி மொழியிலான திரிபீடக நூல் தேசிய மரபுரிமை நூலாக அறிவிக்கப்பட்டு அதனை சர்வதேச மரபுரிமை நூலாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவருகின்றார்.

இதற்கு இணைவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருவதுடன் அரச நிறுவனங்களிலும் இது தொடர்பான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் திரிபீடக நூல் தேசிய மரபுரிமை நூலாக அறிவிக்கப்பட்டமை தொடர்பான நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த மத்திய நிலையத்தின் விகராதிபதி குணானந்த தேரர் கலந்துகொண்டார்.

இதன்போது திரிபீடக நூல் தொடர்பில் விகராதிபதி குணானந்த தேரர் சிறப்புரை நிகழ்த்தினார்.பௌத்த கொடியேற்றப்பட்டு இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.