மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

சிறுமிய துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 07வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவர் வவுணதீவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை வவுணதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் உள்ள வீட்டிலேயே இந்த துயரச்சம்பவம் நடைபெற்றுள்ளது.இதன்போது குறித்த சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் உறவினரான இளைஞர் ஒருவரே இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.