(எஸ்.நவா)
மகா சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று மாலை தொடக்கம் விசேட அபிசேக ஆராதனைகளுடன் நான்கு சாம பூஜைகள் நடைபெற்றது.
இந்நிகழ்வானது இந்து கலாச்சார அணுசரனையுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாச்சார பிரிவும் இணைந்து ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை நடாத்திய கலை நிகழ்வுகள் ஆலய முன்றிலில் நடைபெற்றன.
இன்றைய சிவராத்திரி வழிபாடுகளில் பல இடங்களிலுமிருந்து நுற்றுக்கணக்கான அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.