தேசிய உணவு
உற்பத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணமடு , வட்டக்கச்சி பகுதியில் 05 .10 .2015 காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
அதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலக மட்டங்களிலும் காலை 10.00 மணியளவில் இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து
வைக்கப்பட்டது .
இதன் கீழ் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின்
உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக மண்முனைப்பற்று பிரதேச செயலக செயலாளர் வி . வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலகத்
தோட்டத்தில் பயிர் கன்றுகள் நாட்டும்
நிகழ்வு இடம்பெற்றது .
அதனை தொடர்ந்து கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெள்ளக்கட்டு
கிராமத்தின் பரமலிங்கத்தின் தோட்டத்தில்
அறுவடை நிகழ்வும் அதனுடன் இணைந்ததாக விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று
பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் . மண்முனைப்பற்று
பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் , விவசாய
போதானா பிரிவு உத்தியோகத்தர் ,பொருளாதார உத்தியோகத்தர்கள் , கிராம சேவை
உத்தியோகத்தர் மற்றும் வீட்டு தோட்ட பயனாளிகள் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர் .