“நடமாடும் விழிப்புணர்வும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு”

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “நடமாடும் விழிப்புணர்வும்  துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு” அண்மையில்; மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிறுவனமும் மட்டக்களப்பு பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவும் இணைந்து மட்டக்களப்பு பொலிஸ் அலுவலகத்தின் முன்பாக வை.எம்.சீ.ஏ (YMCA) பொதுச் செயலாளர் மற்றும் பெண்கள் சிறுவர் ஆரம்பமாகியது.

இந் நடமாடும் விழிப்புணர்வு நிகழ்வானது “உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் இருங்கள்” எனும் தலைப்பில் பெற்றோர் மற்றும் வளர்ந்தோரை மையப்படுத்தியதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டபட்ட கிராமங்களில் இடம் பெற்றது. இதன் போது துண்டுப்பிரசுரங்கள், கையேடுகள் என்பனவும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வினை மட்டக்களப்பு (YMAC) வை.எம்.சீ.ஏ உத்திNயுhகஸ்தர்கள், தொண்டர்களுடன் பொலிஸ் காரியாலய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழிப்புணர்வானது ஊர் ஊராய் நகரும் வாகன ஊர்தியானது மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து, சந்தை, அரசடி, பழய கல்முனைவீதி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய், கல்லடி, கல்லடி திருச்செந்தூர், உப்போடை, சீலாமுனை, பாலமீன்மடு, அமிர்தகளி, திராய்மடு, சத்துருக்கொண்டான், கொக்குவில், காந்திகிராமம், ஊரணி, அருதயபுரம், கூழாவடி, எல்லைவீதி, திருமலைவீதி, திருப்பொருந்துறை, புதுநகர், கல்லடித்தெரு, மத்தியவீதி, லேடிமனிங் அவன்னியு ஊடாக மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ யை வந்தடைந்தது.