மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

எங்கள் மதத்தில் மாத்திரமே எங்கள் மதத்திற்கு வாருங்கள் என்று கூறாத ஒரே மதம் எங்கள் இந்து மதம் மாத்திரமே .

இன்றைய காலகட்டத்தின் அவசியமான விழிப்புணர்வு பெற வேண்டிய விடயம் மதமாற்றம். 

 இதனை  சாதாரண விடயம் என்று யாரும் அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது.

இப்போது பரவலாக மதமாற்றம் தொடர்பான பல பிரச்சினைகள் அதிகம் இருக்கின்றது. 

 கடந்த  யுகத்திலும் இனிமேல் வருகின்ற யுகத்திலும் எங்கள் மதத்தில் மாத்திரமே எங்கள் மதத்திற்கு வாருங்கள் என்று கூறாத ஒரே மதம் எங்கள் இந்து மதம் மாத்திரமே .

எந்தக்குழந்தையும் மன்னில் பிறக்கையில் நல்ல குழந்தையே அது நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வழப்பினிலே.

என்ற வாசகத்திற்கு அமைவாக இன்றைய காலகட்டத்தில் அவரவர் தன் குணங்களை காட்டுகின்றார்கள் நான் எவர் மனதையும் புண்படுத்தவில்லை,
மதமாற்ற நிகழ்வால் நல்ல சில அருட்தந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். 

ஆகவே மதமாற்றம் தொடர்பான வேலைகளை கை விடவும்
மதமாற்றம் என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தப்படுவதாக இருக்கக் கூடாது.

இன்று சிலருடைய இயலாமை, வறுமை இவற்றைக் குறிவைத்து மத மாற்றம் நடக்கிறது. தமிழகம் மற்றும் இலங்கையில் சில இடங்களில் மதவெறியர்கள் சிலர் பிற மதக்கடவுள்களை பூச்சாண்டிகள் என்று சிறு குழந்தைகளுக்குப் போதிக்கின்றனர்.

இவ்வாறெல்லாம் கூறி மதமாற்றம் செய்வது மத வெறியையும் வன்முறையையும்தான் ஏற்படுத்துமே தவிர, நல்ல சமுதாயத்தை உருவாக்காது.

 எனவேதான்  கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் வரவேற்க்கப்பட வேண்டியதாகிறது.

மக்களின் அடிப்படைப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமைதான். 

அதற்காக, ஏழை, எளியவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கட்டாய மதமாற்றம் செய்யும் மத ஆதிக்கவாதிகளின் செயல்களைப் பார்த்து கொண்டிருக்க முடியாது.

மதமாற்றத்தால் நிகழப்போகும் பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும். 

அதற்கு ஒரே நேரிய வழி மதமாற்றத் தடைச் சட்டமே!பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் வாழும் நாடு நம் நாடு. 

ஒருவர் தன் விருப்பப்படி மதம் மாறுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஆனால், ஆசைகளை ஏற்படுத்தி, ஒருவரை, இன்னொரு மதத்திற்கு மாறச் செய்வது நாட்டின் நல்லிணக்கத்திற்கும் இறையாண்மைக்கும் ஆபத்தாகவே முடியும். 

அதற்க்காகத்தான் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் தேவை.

ஆகவே இவற்றை கவனத்தில் கொண்டு எல்லோரும் செயற்பட்டால் நல்லதே,
இல்லை எனின் மனிதரிடத்து மனமகிழ்ச்சியும் மனிதநேயமும் மரணித்துப் போகும். நாமெல்லாம் நடைபிணமாவோம்.

கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் கவனத்திற்கு மட்டக்களப்பு சைவ நற்பணி மன்றத்தின் தலைவரும்,  ஏறாவூர் சர்வ மத {இந்துமத} அமைப்பின் இணைப்பாளருமான
சத்திஜோஜாத சிவாச்சாரியார் சிவஶ்ரீ அ.கு. லிகிதராஜக்குருக்கள் விடுக்கும் செய்தி.