ஏறாவூர் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சிப்தொற புலமைபரpசில் 73மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் இருந்து இவ் ஆண்டிற்கான சமுர்த்தி சிப்தொற புலமைபரிசிலுக்கு 73 மாணவர்கள் இம்முறை தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 05.02.2019 பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. 
ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.வி.பிறைசூடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி ஜி.பவதாரனி ஏறாவூர் பற்று பிரதேச செயலக கணக்காளர் திரு.ஏ.ஜோச் ஆனந்தராஜ்ஏறாவூர் பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் செல்வி எஸ்.லோஜினி குமாரவேலியர் கிராம சிறிசித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் திருமதி சுதாகரி மணிவண்;ணன்  மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக முகாமைத்துவ பணிப்பாளர் திரு.எஸ்.ஜெயராஜா கலந்துகொண்து சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.   
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் 

வருடா வருடம் சமுர்த்தி முத்திரை பெறும் பயனாளிகளின் பிள்ளைகள் க.பொ.த(சாதாரண) பரீட்சையில் சித்தியடையும் பட்சத்தில் அவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த(உயர்தரம்) பரீட்சை தோற்றும் வரைக்கும் மாதாந்தம் 1500 ரூபா விகிதம் வழங்கப்படுகின்ற ஒரு புலமை பரிசில் திட்டமே சிப்தொற புலமை பரிசில் திட்டமாகும் கடந்த வருடம் 48 மாணவர்கள் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்டடதாகவும் இவ்ஆண்டில் 300 மாணவர்கள் வருகை தந்த போதிலும் 73 மாணவர்களை மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாணாக்கர்களின் பெற்றோரும் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.