மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மண்முனைப்பற்றினை அச்சுறுத்தும் கபாலி குழு

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியில் கபாலி குழுவின் அட்டகாசம் தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வீடுகளை உடைத்து கொள்ளையிடுதல்,வெறியில் பெண்களிடம் சேட்டை செய்தல்,வீதியில் செல்வோரை மிரட்டுதல் என பல்வேறுபட்ட அட்டகாசங்களை கபாலி என்பவரும் அவரது குழுவினரும் மேற்கொண்டுவருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துகொண்டுசெல்கின்றபோதிலும் சில நாட்டிகளில் மீண்டும் திரும்பிவந்து தமது அட்டகாசங்களை செய்வதாகவும் இங்கு பொது அமைப்புகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

சிலவேளைகளில் பொலிஸாருக்கு ஏதனையாவது கொடுத்துவிட்டும் வந்;துவிடுவதாகவும் பொலிஸார் சரியான நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே இவர்களின் அட்டகாசம் அதிகரித்துவருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் உரிய நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுசெல்வது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.