மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

பெரியகல்லாறு மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் தூய்மை பணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் மாபெரும் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட வரலாற்றினைக்கொண்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் நீண்ட காலத்திற்கு பின்னர் பழைய மாணவர் சங்கம் புனரமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் இன்று பாடசாலை மற்றும் அதன் சூழலை தூய்மைப்படுத்தும் வகையில் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.இதில் பாடசாலையின் பழைய மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.