மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் அப்துல் வஹாப்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில்  பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர்  எம்.ஐ.அப்துல்  வஹாப் கடந்த மாதம் 31 ஆந் திகதி முதல் அமுலுக்கு வருவகையில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.மென்டிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். 
இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட லோஜேஸ்ரிக் (கட்டுமான அபிவிருத்தி) பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பாரியளவில் நடைபெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுக்களிற்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருந்ததுடன், குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த பல குற்றவாளிகளை கைது செய்து தனது கடமையினை திறம்பட ஆற்றியிருந்த நிலையிலேயே, குறித்த பொலிஸ் பரிசோதகர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின்  பதில்  பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை கிழக்கு மாகாண பொது மக்கள் தொடர்பாடல் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரெட்ணம் அவர்களின் பிரத்தியேக உதவியாளராகவும் மிகவும் திறம்பட செயலாற்றி மக்களுக்கு பாரியளவிலான சேவைகளை முன்னேடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.