பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு பார்வீதி,பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்தில் இருந்து செபமாலையுடன் ஊர்வலமாக ஆலயத்திற்கு திருச்சொரூபம் கொண்டுவரப்பட்டது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி லோறன் லோகநாதன் தலைமையில் இந்த கொடியேற்ற வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலயத்திற்கு திருச்சொரூபம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டதும் ஆலய முன்றிலில் உள்ள கொத்தம்பம் அருகே கொடியேற்ற வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து ஆலயத்தில் அருட்பணி ஏ.ஏ.நவரெட்ணம் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி பூஜை நடைபெற்றது.
ஆலயத்தின் கொடியேற்ற திருவிழாவில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவானது பத்து தினங்கள் நடைபெறவுள்ளதுடன் நவநாட்களில் தினமும் மாலை திருச்செபமாலையுடன் திருப்பலியுடன் நிறைவுபெறும்.

எதிர்வரும் 09ஆம் திகதி சனிக்கிழமை ஆலயத்தில் திருச்சொரூப பவணி நடைபெறவுள்ளதுடன் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.