வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியாருக்கு சொந்த மான பேருந்து சிலாபம் - மஹாவெவயில் பயங்கர விபத்து!இன்று அதி காலை 4.30 மணியளவில் வவுனியாவிலிருந்து கொமும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று மஹாவெவயில் சந்தியில் வைத்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டும் விலகி பாலம் மற்றும் மின் மாற்றி  பொறருத்தப்பட்ட கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது மின் மாற்றி பஸ் வண்டியின் மீது விழுந்ததில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்துக்குள்ளான பஸ் வண்டி மின் கம்பத்துடன் மோதுவதற்கு முன்னர் பாதையில் பயணித்த லொறி வண்டியொன்றுடனும் மோதியுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்து சுமார் 19 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.