தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் உலக தாய் மொழி தினம்

உலகத் தாய்மொழி தினத்தினை நாடெங்கும் மிக விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  ஏற்பாட்டில் நடைபெற்ற உலகத் தாய் மொழித் தின நிகழ்வு நேற்று (24) மாலை மட்டக்களப்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையின்; முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் கல்லடி மீனிசைப் பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு உலகத் தமிழ்ப் பேரறிஞ்ஞரும் கம்பன் கழக தலைவருமாகிய கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கல்லடிப் பாலத்தில் உள்ள ஒளவையார் திருவுருவச் சிலைக்கு கம்ப வாரிதி இ.ஜெயராஜ் அவர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதிதிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பிரதான அரங்கிற்கு வரவேற்க்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து தமிழ் மொழி இன்றும் இனியும் எனும் தலைப்பில் கிழக்குப் பல்கழைக்கழக விரிவுரையாளர் அருட்பணி அ.நவரத்தினம் அடிகளார் சிறப்புரையாற்றியிருந்தார்.மாணவர்களின் அழகிய நடனம் அரங்கை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் இந்நிகழ்வினை இளம் கவிஞ்ஞர் ஜீ.எழில்வண்ணன் தனக்கே தனித்துவமான இனிய தமிழில் தொகுத்து வழங்கினார்.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,கவிஞர் த.இன்பராஜா ஆகியோர் கவியிசைத்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியாக உலகத் தமிழ்ப் பேரறிஞ்ஞரும் கம்பன் கழக தலைவருமாகிய கம்பவாரிதி இ.ஜெயராஜ் சிறப்பு தொடர்பில் பேருரையாற்றினார்.