கோறளைப்பற்று தெற்கு கிரானின் புதிய நிருவாகிகள் தெரிவு



கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச இளைஞர் கழகங்களின்  சம்மேளனக் கூட்டம் இன்று 24/02/2019 காலை 10 மணியளவில் கிரான் றெஜி கலாசார மண்டபத்தில்  நடைபெற்றது.

  கோறளைப்பற்று தெற்கு கிரான் இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்தர் த.விந்தியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன நிருவாகத்திற்கு பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர்:-  சா.சஞ்சீவன்
உபதலைவர்:- த.தனுக்சன்
செயலாளர்:- த.விந்தியன் (இ.சே.உ)
உபசெயலாளர் :- க.சரணியா
பொருளாளர் :- ந.கிருஷ்ணரூபி
அமைப்பாளர்:- கோ.தினேந்திரன்
உப அமைப்பாளர்:- க.சிவமதி

இக்கூட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள இளைஞர் கழகங்களின் நிறைவேற்று குழு நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.