லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பலி!

கன்னொருவ – கடுகஸ்தோட்ட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கன்னொருவ – கடுகஸ்தோட்ட வீதியில் பேராதனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உடனடியாக பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.