ஆண்டு இறுதி விழாவும் சேவை நலன் பாராட்டுதல்

 (எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஆண்டு இறுதி விழா வாகரை பிரதேசத்தின் சல்லித்தீவில் (09) சனிக்கிழமை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
இதன் போது சேவையிலிருந்த ஓய்வு பெற்றுச் சென்றவர்கள் மற்றும் இடம்மாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்குமான பாராட்டு நினைவுச்சின்னங்களும் காசோலைகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.