மகிழூர் குளக்கட்டு பகுதியில் இருந்து சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூரின் குளக்கட்டு பகுதியில் இருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குளக்கப்பட்டு பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அவதானித்த மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மகிழூர் பகுதியை சேர்ந்த 39வயதுடைய நடராஜா கோபாலசிங்கம் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்ததாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரணையின் பின்னர் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.