மட்டக்களப்பு வாவி தொடர்பில் கவலைகொள்ளும் ஜப்பான்பெண் -தமிழில் வழங்கிய செய்தி(வீடியோ)

இலங்கையின் இரண்டாவது நீண்ட வாவியான மட்டக்களப்பு வாவியினை தூய்மையாக வைத்திருக்க மக்கள் முன்வரவேண்டும் என ஜப்பானை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரும் ஜெய்க்கா திட்டத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான இணைப்பாளருமான சட்டோமி வாடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இவர் இன்று அவுஸ்ரேலியாவில் இருந்துவந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து மட்டக்களப்பு வாவியின் கரையினை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து முன்னெடுத்தார்.

இதன்கீழ் கல்லடி பாலம் தொடக்கம் மட்டக்களப்ப பொதுச்சந்தை வரையிலான வாவி கரைப்பகுதி தூய்மைப்படுத்தப்பட்டதுடன் அப்பகுதியில் இருந்து பெருமளவான பொலித்தீன் பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்தகொண்டதுடன் சிரமதான அடிப்படையில் வாவிக்கரை தூய்மைப்படுத்தப்பட்டன.

இதன்போது பெருமளவான கழிவுப்பொருட்கள் வாவிக்கரையில் இருந்து மீட்கப்பட்டது.இது எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கும் வாவிக்கும் ஆபத்தினை ஏற்படுத்தும் என ஜெய்க்கா திட்டத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான இணைப்பாளருமான சட்டோமி வாடா தெரிவித்தார்.