கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஹர்த்தால்

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவரகளின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களின் நியமனம் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவான பயத்தினையும் பதற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் இந் நியமனத்தினை கிழக்குமாகாண தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்பதை ஜனாதிபதி அவர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 25.01.2019 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அமைதிவழி போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  

மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக 25ம் திகதி வெள்ளிக்கிழமை; மக்கள் வீட்டை விட்டு வெளியே வராது வீதியை வெறிசசோட்டும் போராட்டத்தில் ஈடுபவவுள்ளார்கள் எனவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் பதவியை பயன்படுத்தி வாழைச்சேனையில் கோயில் காணியை பள்ளிவாசல் மற்றும் சந்தையாக கட்டிவித்தேன் என பேசியதையும் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளமைக்கும் மற்றும் தனக்கு சார்பாக நீதிமன்ற தீர்பை மாற்றி என பேசியமை , வட கிழக்கு இணைக்கப்படால் இரத்த ஆறு ஓடும் என பாராளுமன்றில் பேசியமையும் என பல குற்றச்சாட்டுக்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் மீது  முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ் அறிக்கை மூலமாக பொருத்தமில்லாத ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதை எதிர்ப்பதாகவும் எனக் குறிப்பிட்டு  ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.