சற்று முன்னர் மட்டக்களப்பில் பாரிய விபத்து

(ஞானம்)

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதிவழியாக காத்தான்குடி பகுதியில் இருந்து வருகைதந்த வேன் வண்டியானது வேக கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் எதிரே வருகைதந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்ததுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.