மட்டு மாநகர முதல்வர் அவர்களுக்கு!முகநூல் வாயிலாக ஒரு வேண்டுகோள்

மட்டக்களப்பு நகரில் மாவட்டத்தின் அடையாளமாக திகழ்வது கல்லடி பாலம். இந்த பாலம் இரண்டு பிரதேசத்தை இணைக்க போடப்பட்டதே தவிர மனிதர்களின் உயிர்களை உறவினர்களிடம் இருந்து பிரிப்பதற்காக போடப்பட்டதல்ல.
எனவே கல்லடி பாலத்தில் பழைய பாலம், புதிய பாலம் இரண்டு உள்ளது. அவற்றில் புதிய பாலம் மக்கள் பாவனைக்காக 100% பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பழைய பாலம் சைக்கிளில் பயணம் செய்வோருக்கும் கால் நடையாக பயணம் செய்வோருக்கும், உல்லாச பயணிளுக்கு மட்டக்களப்பின் அடையாளத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்களை எடுப்பதற்குமான இடமாக உள்ளது. 
ஆனால் வீடுகளில் ஏற்படும் மன உளச்சல், காதல் வலிகள், கலியாண பிரச்சனை, கடன் தொல்லைக்கு தற்கொலை செய்து கொள்ளும் இடமாக சிறுவர்கள் தொடர்க்கம் பெரியவர்கள் வரை ஆண் பெண் என்ற வேறுபாடுயின்றி தற்கொலை செய்து கொள்ளும் கொலைக்களமாக இந்த கல்லடி பாலம் அடையாளப்படுத்தப்படுவது யாவரும் அறிந்த உண்மை. 
தயவு செய்து முதல்வர் அவர்களே கல்லடி பாலத்தை மட்டக்களப்பு மாவட்டத்திக்கு வரும் அனைத்து உல்லாச பயணிகளையும் கண்கவரும் வகையில் பழைய கல்லடி பாலத்தின் உள்ளக வெளியை மாவட்டத்தின் நூதனசாலையாக மாற்றம் செய்யது அத்தோடு இரண்டு பாலத்தின் நடுவில் தற்கொகொலை செய்வோரின் உயிர் காப்பாற்றும் முகமாகவும் உல்லாச பயணிகள் கண்கவரும் வகையில் அலங்கார மலர் செடிகளை தொங்கு பந்தல் அமைப்பில் வளர்த்து அதனை மாநகர சபையால் பராமரிப்பு செய்ய முடியாதா? 
மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்தால் ஒரு பிள்ளைக்கு 5000/ ரூபா பணம் கொடுக்கும் நல்ல பல திட்டங்களை நெறிப்படுத்தும் நீங்கள் இந்த கல்லடி பாலத்தை நூதனசாலையாகவும், பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வோரை தடுக்கும் நோக்கிலும் உல்லாச பயணிகளை கவரும் வகையில் அலங்கார வேலைப்பாடுகளை செய்யும் திட்டம் ஒன்றை ஏன் உங்களால் செய்ய முடியாது? 
விரைவாக இவ்வாறான திட்டங்களை மாநகர சபையால் நெறிப்படுத்துங்கள் மாநகரசபையின் வருமானம் உல்லாச பயணிகளின் வருகையால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நன்றி.
ஜீ.ஜெ.பிரகாஸ்