வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

 (எஸ்.நவா)

தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (17.01.2019) வியாழக்கிழமை வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் மிகக் கோலகலமாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக போரதீவுப்பறறு கோட்டக்கல்வி அதிகாரி திரு.ரீ.அருள்ராஜா .சிறப்பு அதிதியாக வித்தியாலய PTS  இணைப்பாளர் திரு.ரீ.நடேசமூர்த்தி ;.ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் கலந்து கொண்ட இதில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தரம் 1இ2 மாணவர்களுக்கு கற்றலுபகரணப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.