மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கால்கோள் விழா

ஐந்தாம் தர பரீட்சையினைநோக்காக கொண்டு மாணவர்கள் துன்புறுத்தப்படுவது தவிர்க்கப்படவேண்டும் என மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் வி.மயில்வாகனம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் கால்கோள் நிகழ்வுகள் இன்று காலை பாடசாலைகளில் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கால்கோள் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் வி.மயில்வாகனம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக வலய கல்வி அலுவலக திட்டமிடல் பிரிவுக்கான உதவி பணிப்பாளர் வை.சி.சஜீவன்,வலய ஆரம்பபிரிவு உள்ளக சேவை ஆலோசகர் திருமதி எஸ்.பூபாலசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2019ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுடன் கால்கோல் விழா ஆரம்பமானதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.

இந்த ஆண்டு 115க்கும் அதிகமான புதிய மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.