மில்கோ நிறுவன ஏற்பாட்டில் பண்ணையாளர்களின் மாணவர்களுக்கு காசோலை; வழங்கும் நிகழ்வு(எஸ்.நவா)

மில்கோ மட்டக்களப்பு பிராந்திய நிறுவன ஏற்பாட்டில் தரம் 1ற்கு பாடசாலைக்கு செல்லும் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களும்  20 வருடங்கள் தொடர்ச்சியாக பால் வழங்கி 75வயதை பூர்த்தி செய்த பண்ணையாளர்களுக்கான காசோலை வழங்கும்  நிகழ்வு வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் நேற்று (16) புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது விவசாயம் நீர்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி பிரதம அதிதியாகவும்; கிழக்கு பிராந்திய மில்கோ நிறுவனத்தின் முகாமையாளர் கனகரெத்தினம்; சிறப்பதிதியாகவும் அமைச்சின் இணைப்பு செயலாளர்கள் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டயஸ் பாடசாலையின் அதிபர் எஸ்.கணேசமூர்த்தி கிராமசேவக உத்தியோகத்தர் மற்றும் மில்க்கோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் 
மில்கோ நிறுவனம் அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் நாங்கள் உங்களை கைவிடமாட்டோம்;  பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கு 3500 பெறுமதியான கற்றல் உபகரணங்களும் 75வயதினை பூர்த்தி செய்த பண்ணையாளர்களுக்கு ஜம்பதாயிரம் பெறுமதியான காசோலைகளும் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்தது. 

எனவே எல்லோரும் நம்பிக்கையோடு இருக்கவேண்டும் நாங்கள் எதிபார்ப்பது உங்களுடைய வாழ்வாதாரம் உயத்தப்பட வேண்டும் அதனுடாகத்தான் உங்களுடை பிள்ளைகள் உயர்வடைவார்கள்  அவர்கள் ஒரு வைத்தியராக சட்டதரணியாக கல்விமானாக கனவுகான வேண்டும் அவ்வாறு கனவுகண்டால் மாத்திரம்தான் நாங்கள் அப்படியாக வரமுடியும்; இதனை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என தனதுரையில் குறிப்பிடடிருந்தனர்.