தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் புத்தாண்டில் முதல் நாள் அரச கடமை ஆரம்பம்.(சசி துறையூர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் புத்தாண்டில் சுப நேரத்தில் தேசிய கொடி ஏற்றி கடமையினை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (01.01.2019) காலை 09.00 மணியளவில்  உதவிப்பணிப்பாளர் ஹாலித்தீன் ஹமீர் தலைமையில் நடைபெற்றது.

இவ் ஆரம்ப நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து, நாட்டுக்காக உயீர்நீத்த வீரர்களுக்காக இருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்தி, அரசாங்க சேவை சத்தியப் பிரமாணம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் சேவை அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.