ஜனாதிபதி 25ம் திகதி எமது போராட்டத்தை கவணத்தில் எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் வீதிக்கு இறங்கும் - தமிழ் உணர்வாளர் அமைப்பு

ஜனாதிபதி 25ம் திகதி  எமது போராட்டத்தை கவணத்தில் எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் வீதிக்கு இறங்கும்  தமிழ் உணர்வாளர் அமைப்புப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு - செங்கலடியில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் நமாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்  - கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை தமிழ் மக்கள் அளுநராக ஏற்க மறுத்து ஜனவரி 25ந் திகதி மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வீட்டுக்குள் முடங்கி வீதிகளை வெறிச்சோடச் செய்யும் போராட்டத்தினை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 25 போராட்டமானது ஒரு இனத்துக்கு எதிரானதே அல்லது மதத்துக்கு அல்ல தனிப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஏற்க மறுப்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கமாகும்.

நாங்கள் இன மற்றும் மத அடிப்படையில் போராட்டம் நடத்துபவர்களாக இருந்திருந்தால் கடந்த கிழக்கு மாகாணசபையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகபடியான ஆசனங்களை வைத்திருந்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஹாபிஸ் நஸீர் அகமட் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்பு தெரிவித்திருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் என்பது பல்லின மக்களைக் கொண்ட பகுதியாகும் இதிலே தமிழரோஇ முஸ்லிமோ அல்லது சிங்களவரோ அளுநராக வரமுடியும் யார் வந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை. எமது பிரச்சினை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அளுநராக நியமிக்கப்பட்டதை மாத்திரமே நாங்கள் ஏற்க மறுக்கின்றோம்.

தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஓட்டமாவடியில் காளி கோவில் காணியை அபகரித்ததாகவும் தனக்கு சாதகமாக ஒரு தீர்ப்பனைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதிபதியை மாற்றி தீர்ப்பினை சாதகமாக பெற்றுக்கொண்டதாக ஒரு காணொலியிலே கூறியுள்ளார். அது மாத்திரமின்றி வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என பேசியுள்ளார்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் ஆயுதங்கள் இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர் வாழைச்சேனை நீதிமன்றில் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இவரைப் பற்றி பல பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் அளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு கட்சி சார்ந்தவர். அவர் அளுநர் பதவியை வைத்துக்கொண்டு தனது கட்சிக்கு சாதகமான நடந்துகொள்வார்.

கிழக்கு மாகாணத்தில் மாகாணசபை கலைக்கபட்ட நிலையில் அவரைக் கண்காணிப்பதற்கு எவரும் இல்லாத நிலையில் இவர் நினைத்தவற்றை செய்யும் வாய்ப்பு இவருக்கு உள்ளது.

இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்குள்ள அரச காணிகளை அபகரிப்பதுஇ அரச அதிகாரிகளை இடமாற்றுவது தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியில் இவரது தாக்கம் இருப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார் என தமிழ் மக்கள் மத்தில் பயமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இவரது நியமனத்தை ஏற்க மறுக்கின்றோம் என ஜனாதிபதிக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் காட்டுவதற்காகவே ஜனவரி 25ஆந் திகதி  மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வீட்டுக்குள் முடங்கி வீதிகளை வெறிச்சோடச் செய்யும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்' என்றார். 

ஜனாதிபதி 25ம் திகதி  எமது போராட்டத்தை கவணத்தில் எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் வீதிக்கு இறங்கும்  தமிழ் உணர்வாளர் அமைப்புப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன்  மேலும் தெரிவித்தார்.