வனத்து அந்தோனியார் ஆலய வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுவப்பங்கேணி வனத்து அந்தோனியார் ஆலயத்தினை சூழவுள்ள வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக கடும்மோசமான நிலையில் இருந்த குறித்த வீதிகள் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மாநகர முதல்வர் மேற்கொண்டிருந்தார்.

தற்போது வனத்து அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் குறித்த வீதியினை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

குறித்த பகுதிக்கு விஜயம்செய்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் குறித்த வீதிகளின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்களான வே.தவராஜா,இராஜேந்திரன்,மதன் உட்பட மாநகரசபை உத்தியோகத்தர்களும் இணைந்திருந்தனர்.